சோனாலி போகத் விஷம் வைத்து கொலை; உதவியாளர்கள் கைது

பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தை விஷம் வைத்து கொன்ற உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் சோனாலி போகத். டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டதன் மூலம்…

பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தை விஷம் வைத்து கொன்ற உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் சோனாலி போகத். டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.கடந்த 22ம் தேதி கோவா சென்ற சோனாலி, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மயங்கி கிடந்தார்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனாலி மாரடைப்பில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சோனாலியின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், சோனாலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அவரது உடலில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், உணவகத்தில் நடந்த பார்ட்டியின் போது, சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர், அவர் குடித்த பானத்தில் விஷம் கலந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சோனாலியின் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.