திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன், பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியன். இவரின் மகன் பாப்பா வெற்றி 15 ஆண்டுக்கு முன்பு கல்விக்காக லண்டன் சென்றார். பின்னர், 15 வருடங்களுக்கு முன்பு கல்விக்காக லண்டன் சென்றவர், அங்கேயே தங்கி குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், லண்டன் சென்ஸ்போர்டு நகரக் கவுன்சிலராக, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில்
போட்டியிட்டார். இதில், அவரை எதிர்த்து போட்டியிட்ட மேட்ரிக் மான்லியை விட கூடுதல் வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ள பாப்பா வெற்றி தற்போது கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா