சாலை வசதி செய்து கொடுத்த எம்எல்ஏ: பால் அபிஷேகம் செய்து அசத்திய கிராம மக்கள்!

ஆந்திராவில் சாலை வசதி கொடுத்த சட்டமன்ற உறுப்பினரை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமமக்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து நன்றி தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் பார்வதிபுரம்மணியம் மாவட்டம் பி.சக்கரபள்ளி கிராமத்திற்கு சரியான சாலை…

ஆந்திராவில் சாலை வசதி கொடுத்த சட்டமன்ற உறுப்பினரை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமமக்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம்மணியம் மாவட்டம் பி.சக்கரபள்ளி கிராமத்திற்கு சரியான சாலை வசதி இல்லை. சாலை அமைத்து தரக்கோரி சுமார் 25 ஆண்டுகளாக அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை அமைத்து தரப்படும் என அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்து செல்வார்கள். ஆனால் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய எம்எல்ஏ அழகங்கி ஜோகராவ் தான் வெற்றி பெற்றால் சாலை வசதி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி பி.சக்கரபள்ளி கிராமத்திற்கு சாலை அமைத்து கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராமத்தினர் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா எடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அவரை அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க அதே சாலை வழியாக ஊருக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை மேடையில் அமர வைத்து பாலாபிஷேகம் செய்தனர்.பின்னர் அவருக்கு மாலை அணிவித்து கிராமத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர். இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில் எம்எல்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.