யாரோ எழுதிக் கொடுத்ததை பேசுகிறார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வயித்தெரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எந்தெந்த இடத்தில் பழனிசாமி என முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக சொன்னாரோ, அந்த இடத்தில் ஸ்டாலின் என fill in the blanks என்பது போல எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடுகிற கூட்டம், மக்கள் தலைவராக ஸ்டாலின் இருப்பதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னோடு இருக்கும் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ள ஆதாரமற்ற முறையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். சொத்து வரி உயர்த்தாவிட்டால் மத்திய சர்க்கார் சொல்லியதை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். நான் தொடர்ந்த வழக்கின் எதிரொலியாகவே அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வரி சீராய்வு செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கரண்டே வேண்டாம் என பலபேர் சொல்லக் கூடிய நிலையை மறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கட்டண உயர்வை நியாயப்படுத்தவில்லை, செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உட்கட்சி பிரச்னைகளை திசை திருப்பவே எடப்பாடி பேசுகிறார். கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

கொலைக் குற்றவாளியாக இருந்தவரை மந்திரியாக்கி, கோடி கோடியாக சம்பாதித்து வைத்திருக்கிறார். சசிகலா என்ற அம்மையார் இல்லையென்றால் முதலமைச்சர் ஆகியிருப்பாரா?
ஏழைப்பங்காளன் என்று சொல்கிறாரே. ரெய்டின்போது காட்டும் வீடுகளெல்லாம் எலிசபத் மகாராணி வீடு போல உள்ளது. அந்தஸ்து, ஆஸ்திக்கு ஜெயலலிதா என்ற ஜீவன் காரணம்.
நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்திருக்கிறோம். அதிமுக விவாதிக்கத் தயாரா? பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது?
ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என மோடி சர்க்காருக்கு தீர்மானம் போட தைரியம் இருக்கிறதா? 4 தலைமை உள்ளதாக சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை மனதில் வைத்து 4 தலைமை என சொல்லியிருக்கிறார்.
கமிஷன், கலெக்சன், கரெப்சன் என நாங்கள் சொன்னதையே சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதைத் தொடர்ந்தால் தெருத் தெருவாக தெருமுனைக் கூட்டங்களை நடத்தி பதிலளிக்கத் திமுக தயங்காது.
இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் மெண்டல் ஆஸ்பிடலுக்கு போக வேண்டியதுதான். எந்த அதிகாரியையும் புதியதாக நாங்கள் சேர்க்கவில்லை. எஸ்.பி. வேலுமணிக்கும், உதயச்சந்திரனுக்கும் தனிப்பட்ட தகராறு என்னவென்று தெரியாது.
2 ஜியே பார்த்து சமாளித்து வந்தவர் ஆ ராசா. பெரியார் சொன்னதையே ஆ ராசா சொல்லியிருக்கிறார் என்றார் ஆர்.எஸ்.பாரதி.







