முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

வேதாந்தா நிறுவனத்தால் மகாராஷ்டிர அரசியலில் சர்ச்சை.. காரணம் என்ன?


ரா.தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்கும் என்ற அறிவிப்பு மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கான காரணம் என்ன? கொந்தளிப்பிற்கான பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சிப் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளாக சிப் தட்டுப்பாடு, மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை வெகுவாக பாதித்தது. இந்தியாவில் இதுவரையில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை இல்லாத நிலையில், செமி கண்டக்டர் சிப் உற்பத்தி ஆலையை அமைக்கும் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவளிக்கும் என்று அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அமெரிக்காவின் பாக்ஸ்கான் நிறுவனம், அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா குழுமத்துடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளது என அறிவிப்பு வெளியானது.

இதற்காக சில நாட்களுக்கு முன்பு குஜராத் அரசுடன் இவ்விரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இது, பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஷிண்டேவும், பாஜக தலைவர்களும், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்து குஜராத்துக்கு கொடுக்கின்றனர் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படேல் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை, தேசியவாத காங்கிரஸும், சிவசேனாவும் முன் வைக்கின்றது.

இந்த அரசியல் கொந்தளிப்புக்கு காரணம் பாக்ஸ்கான் -வேதாந்தா குழுமம் மைக்ரோ சிப் ஆலையை தொடங்க, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தை அந்நிறுவனங்கள் தேர்வு செய்தன. ஆனால் இறுதியில் குஜராத் மாநிலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில் செமிகண்டக்டர் மைக்ரோ சிப் ஆலை அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவையும், மாநில பாஜகவினரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. டெல்லியில் உள்ள தங்கள் தலைவர்களின் ஆசியைப் பெற மும்பையை கூட குஜராத்துக்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் நானோ படேல் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தைய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது என்றும், ஆனால் முடிவெடுக்கவில்லை என்றும் மகாராஷ்டிர அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தில், இப்புதிய நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் நிலம் இலவசமாக, 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் மின்சாரம் குறைவான விலையில், முதல் 20 ஆண்டுகளும், நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய கட்டணத்தை செலுத்த சலுகை அளிக்கப்படுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரசியல் கொந்தளிப்புகளை குறைக்கும் முயற்சியாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால், மகாராஷ்டிர மாநிலத்தில், வரும் ஆண்டுகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்தவதற்கான தொழிற்சாலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

-ரா.தங்கபாண்டியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனோ

Arivazhagan Chinnasamy

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது-முதல்வர் ஸ்டாலின்

Web Editor

வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!

G SaravanaKumar