”1 ஆண்டில் 99.45% புகார்களுக்குத் தீர்வு” – அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை 9,17,572 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 9,12,599 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி…

மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை 9,17,572 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 9,12,599 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், திமுக அரசு பதவிக்கு வந்ததும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், மின் தடை, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம், மின்னழுத்த ஏற்ற, இறக்கம், சேதமடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களை இந்த சேவை மையத்தில் தெரிவிக்கலாம்.

அண்மைச் செய்தி: ‘’2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி நிச்சயம் கட்சத்தீவை மீட்பார்’ – பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி’

அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு முதலமைச்சரால் மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த 20.06.2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த மின்னகம் மின் சேவை மையம் இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் மின்னகத்தின் மூலம் 9,17,572 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. 9,12,599 புகார்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், வரக்கூடிய ஆண்டுகளில் இன்னும் சிறப்பான சேவைகளைச் செய்வதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், செயலி மூலமாகப் புகார்களைத் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோடான கோடி நன்றி எனவும், மின் வாரிய அதிகாரிகள் & பணியாளர்களுக்குப் பாராட்டுகள் எனத் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.