முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சமூக நலத்துறைகளின் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் மற்றும் அர்ச்சகர்ககளுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 3 ஆயிரத்து 243 சதுர அடி பரப்பளவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து, சமூக நலத்துறை சார்பில், 2021 – 2022ஆம் நிதியாண்டில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 94 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சென்னையைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

நள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!

Arivazhagan CM

ரூ.49.50 கோடி கடன் : கமல்ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா?

Halley Karthik

குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட விவகாரம்: இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Gayathri Venkatesan