சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“பி.பி.மண்டல் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சமூக நீதியின் முன்னோடி, ஓ.பி.சி.க்களுக்கு கட்டமைப்பு ரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை அவரது ஆணையம் அம்பலப்படுத்தியது. நாடு அதை அங்கீகரிப்பதற்கு முன்பே, திராவிட இயக்கம் அவரது தொலைநோக்குப் பார்வையில் உறுதியாக நின்றது.

அவர் நடத்திய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அவரது துணிச்சலான மற்றும் நியாயமான பரிந்துரைகள் பல இன்னும் தூசி படிந்துள்ளன. மேலும் சமூக நீதிக்கான முயற்சிகள் புதிய வடிவங்களில் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.

பி.பி.மண்டலை கௌரவிப்பது என்பது அவரது முழுமையான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதாகும், அதை நீர்த்துப்போகச் செய்வதல்ல. அந்தப் போராட்டத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.