வெப்பத்தின் கோரத்தாண்டவம்: ராஜ்கோட்டில் 108.14°F பதிவு!

இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.

அந்த வகையில் நேற்று நாட்டில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 108.14°F வெப்பம் பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக சத்தீஸ்கர், ராஜ்நந்த்கானில் 107.6°F, ஆந்திர மாநிலத்தின் பாபட்லாவில் 107.06°F, காவாலியில் 106.52°F,
ஓங்கோலில் 105.8°F, தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் 107.24°F வெப்பமும் பதிவாகி வெயில் சுட்டெரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.