முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பாடலாசிரியர் சினேகன் திருமணம்: நடிகையை மணக்கிறார்

பாடலாசிரியர் சினேகன் திருமணம் வரும் 29 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமை யில் நடக்க இருக்கிறது.

பிரபல பாடலாசிரியர் சினேகன். இவர், ’கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலா மா’(சாமி), ’ஞாபகம் வருதே’(ஆட்டோகிராப்), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), ஐயையோ (பருத்திவீரன்) உட்பட பல்வேறு ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.  ’யோகி’ படம் மூலம் நடிகரான அவர் ‘உயர்திரு 420’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான சினேகன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரும் நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்தனர். நடிகை கன்னிகா, ’தேவராட்டம்’, ’அடுத்த சாட்டை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் ’ராஜவம்சம்’ படத்திலும் நடித்துள்ள கன்னிகா, ’கல்யாண வீடு’ என்ற டிவி தொடரிலும் நடித்துள்ளார். இவர்கள் திருமணம், வரும் 29 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.

இது தொடர்பாக சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். அனைவரின் நலன் கருதி எளிமையாகவும் தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் திருமணம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிர்வாணமாக நடிக்க ஆண்ட்ரியா கட்டாயப்படுத்தப்பட்டாரா?

Vel Prasanth

மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை; பணியாளர்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Halley Karthik

முதலமைச்சரின் ஆணைப்படி முகப்பு தோற்றம்- அமைச்சர் எ.வ.வேலு

G SaravanaKumar