ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி சனிக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொண்டு 3-2 என்ற கோல் கணிக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 4:51 மணிக்கு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா ஹாக்கி அணியை மணிக்கு எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டானியல் பியலீ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 7 கோல்களை அடித்தது. இந்தியா ஒரு கோல் அடித்து தோல்வியை தழுவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல்நாளான நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம்பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார்.

இதனிடையே, டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டவாது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார். மேலும், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர். மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில், 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியை தழுவினார்.தொடர்ந்து மாலை 4.51 நடபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பள்ளி மாணவி தற்கொலை

G SaravanaKumar

“தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” – மநீம மகேந்திரன்

G SaravanaKumar

ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer- ஆளுநர் தமிழிசை புகழாரம்

G SaravanaKumar