பாலா இயக்கிய ‘வணங்கான்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழு ஸ்னீக் பீக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் அருண் விஜய் உடன் ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின் , சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “இங்க பேயும் நிஜம்.. சாவும் நிஜம்” – வெளியானது ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர்!
சமீபத்தில் படத்தின் முதல் பாடலான இறை நூறு மற்றும் மெளனம் போலே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.







