பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கொள்ளையா்கள் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில்
அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து விசாரணையில் திங்கட்கிழமை காலை கடைவீதியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தப்பினர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் உடுமலை அக்கவநாய்க்கன்புதூரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இறந்து போன மற்றொரு கொள்ளையன் பெயர் விபரம் தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு இவர்களுடன் வந்த கூட்டாளிகள் தப்பியோடி இருக்கலாம் எனவும் இறந்த கொள்ளையர்கள் மீது பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூபி.காமராஜ்







