நாகப்பட்டினம் அருகே கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கல்லூலி திருவாசல் பகுதியை
சேர்ந்த இளைஞர் மகேந்திரன், வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது பாம்பு கடித்ததுள்ளது. பாம்பு கடித்ததை அறிந்த இளைஞர் அங்கு இருந்த பொதுமக்களின் உதவியோடு கடித்த பாம்பை அடித்துள்ளார். பின்னர் 3 அடியுள்ள சாரை பாம்பை கேரி பேக்கில் போட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞரை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் உயிரிழந்த பாம்பை அங்கிருந்த மருத்துவர்கள் மாறிமாறி புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடித்த பாம்பை கையோடு கேரி பேக்கில் போட்டு எடுத்து வந்து, நாகை மருத்துவமனையை அலரவிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
—-ரூபி.கா







