ஆசியன் ஹாக்கி போட்டியை நடத்த பணிகள் தீவிரம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஆசியன் ஹாக்கி போட்டி நடத்த சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களை ஆய்வு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு…

ஆசியன் ஹாக்கி போட்டி நடத்த சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களை ஆய்வு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“இந்த வாய்ப்பைக் கொடுத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சருக்கு நன்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தியது போல் ஏசியன் ஹாக்கி போட்டியையும் நடத்த உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கேலோ இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா மற்றும் நிறைவிழாக்களில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார். எனவே ஏசியன் ஹாக்கி போட்டிகளுக்கும் அவரை கண்டிப்பாக அழைப்போம். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களின் வசதிகளை பார்வையிட்டு முதற்கட்ட கூட்டத்தில் பேசியுள்ளோம்” என கூறினார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் தரப்போவதாக தகவல்கள் வந்துள்ளது என்ற செய்தியாளர்களிடம் கேள்விக்கு அவர் எனக்கே தகவல் தெரியவில்லை, நீங்கள் சொல்லி தான் தெரிகிறது என்று பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.