சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் உணவு பாதுக்காப்புத்துறை தொடர்பாக புதிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா சபையால் கடைபிடிக்கப்படுவதனை முன்னிட்டு நுகர்வோர் சத்தான உணவினை உட்கொண்டு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு வழங்குவது அவசியம் ஆகிறது.
இது தொடர்பாக கண்காட்சிகள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறுதானிய பயன்பாட்டின் விழிப்புணர்வினை ஏற்படுத்த அனைத்து மாவட்டத்திலும் சிறுதானிய உணவு திருவிழா உடன் நிகழ்ச்சிகள் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.







