முக்கியச் செய்திகள்

சிறு வணிக கட்டடங்களுக்கு நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்: வானதி சீனிவாசன்

2 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட சிறு வணிக கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அரசு இயற்றியுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019-ன் படி, புதிய கட்டடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க கட்டடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், விதி 20(1) இன் கீழ், குடியிருப்பு கட்டடங்கள் மூன்று குடியிருப்புகளுடன் அல்லது உயரம் 12 மீட்டருக்கு குறைவாக அல்லது பரப்பு 750 சதுர மீட்டருக்கு (8072 சதுர அடி) குறைவாக இருப்பின் கட்டடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, எல்லா வகை தொழிற்கூட கட்டடங்களுக்கும் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு வணிக கட்டடங்களுக்கு எந்த ஒரு விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விதிகளில் உள்ள முரண்பாடால், சிறு மளிகை கடைகள், சிகை அலங்கார கடைகள், சிறு தேநீர் கடைகள், பேக்கரிகள், துணி தைக்கும் கடைகள் போன்ற சிறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சிறு நிறுவனங்கள், கட்டடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் பெற/சமர்ப்பிக்க முடியாததால் அவர்களுடைய புதிய கட்டடடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் பெற முடியாமல் அவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்தில் உள்ளனர். ஆகவே, சிறு குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூட கட்டடங்களுக்கு எவ்வாறு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு சிறு வணிக கட்டடங்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும். இரண்டாயிரம் சதுர அடிக்கு உட்பட்ட சிறு வணிக கட்டடங்களுக்கும் கட்டடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

அதுபோன்று, இரண்டு தரைதள குடியிருப்பு உள்ள கட்டடத்தில், விரிவாக்கம் செய்யும்போது மேலே இரண்டு குடியிருப்புகள் கட்டும்போது மொத்த குடியிருப்புகள் எண்ணிக்கை நான்கு ஆகிவிடுகிறது. எனவே குடியிருப்பு கட்டடங்கள் மூன்று குடியிருப்புகளுடன் என்பதை மாற்றி, நான்கு குடியிருப்புகள் ஆனால் 12 மீட்டருக்கு குறைவாக அல்லது 750 சதுர மீட்டருக்கு (8072 சதுர அடி) குறைவாக இருப்பின் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறு தொழில் செய்வோர், நடுத்தர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ. 360 கோடி நஷ்டமடைந்த ஜொமேட்டோ நிறுவனம்

Halley Karthik

இன்று ஒரே நாளில் 17.70 லட்சம் தடுப்பூசிகள்

EZHILARASAN D

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

Jayasheeba