மீண்டும் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா

இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளேன். இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும்…

இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளேன்.

இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தையும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்தையும் இயக்கி வருகிறார். கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உட்படப் பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார், இயக்குநர் ஷங்கர். பட்ஜெட் அதிகமானதால், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஷூட்டிங் தாமதமானது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் சரண், கியாரா அத்வானியுடன் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு, இசை அமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் கோட் சூட் அணிந்து இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோ ராம் சரணும் ஹீரோயின் கியாராவும் அரசு அதிகாரிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளேன். அவரின் ரசிகனாகவும் ஒரு நடிகராகவும் நிரைய கற்றுவருகிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.