தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகளின் பெயர்
பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
அரசு பல திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறது. ஆனால், அதிகாரிகள் அதனை முறையான நபர்களுக்கு வழங்குவதில்லை. இதனால் இந்த திட்டங்களில் நோக்கம் வீணாகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த வெற்றிவேல் உயர்நீதிமன்ற
மதுரைக்கிளைகள் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தில் மேற்பட்ட SC/ST வகுப்பை
சார்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர்களுக்காக இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.நத்தம் பகுதி 1994 ஆண்டு SC/ST அரசாணையின் படி 4 வகைகளாக பிரித்து 1.30
ஏக்கர் இலவச குடியிருப்பு மனைகளாகவும், 0.65 ஏக்கர் சாலைப் பகுதியாகவும், 0.33
அங்கு இருக்கும் மக்களின் பிற தேவைக்காகவும், 1.09 ஏக்கர் வருங்கால இலவச பட்டா
தேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. மேலும் அரசாணையின்படி எஸ்.பி நத்தம்
பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே இலவச பட்டா ஒதுக்கப்பட வேண்டும்
என உள்ளது.
1.09 ஏக்கர் வருங்கால தேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் எஸ்.பி நத்தம்
கிராமத்தை சேர்ந்த 65 நபர்கள் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக விண்ணப்பித்து
இருந்தோம். ஆனால் எங்கள் கிராமத்தின் அருகே உள்ள எஸ்.பெருமாள்பட்டி மற்றும்
கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பலருக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 முதல்
3 நபருக்கும் இங்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது, இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித
நடவடிக்கையும் இல்லை. எனவே, 1994 அரசாணையில் உள்ளது போல் எஸ்.பி.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்களே ஆதிதிராவிடர்களுக்கான இலவச பட்டாக்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இதேபோல் சாந்திவீரன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு இலவச பட்டாக்கள் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கியுள்ளது. அரசு பல திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறது. ஆனால், அதிகாரிகள் அதனை முறையான நபர்களுக்கு வழங்குவதில்லை. இதனால் இந்த திட்டங்களில் நோக்கம் வீணாகிறது.
தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகளின் பெயர்
பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு குறித்து விரிவான அறிக்கையை
அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.