வெளிநாடுகளில் ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைத்த #Amaran

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அமரன்’ படம் தற்போது வரை ரூ.75 லட்சத்திற்கும் மேல் வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல்…

Sivakarthikeyan,Amaran, KamalHaasan,Rajkumar Sivakarthikeyan,Amaran, KamalHaasan,Rajkumar

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அமரன்’ படம் தற்போது வரை ரூ.75 லட்சத்திற்கும் மேல் வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. படத்தின் சிறப்பு காட்சி இந்திய ராணுவ வீரர்களுக்கு திரையிடப்பட்டது.முன்னதாக இந்த திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஹே மின்னலே’ ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!

இந்நிலையில், திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ளது. உலகமெங்கும் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. திரைப்படத்தின் முன் பதிவு தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து இதுவரை 75 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.