விஜய், அஜித் இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று சிவகார்த்திகேயன் கேரியரில் மற்றுமொரு மைல் கல்லாக மாறியிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகியிருக்கிறார்.…

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று சிவகார்த்திகேயன் கேரியரில் மற்றுமொரு மைல் கல்லாக மாறியிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகியிருக்கிறார்.

மெரினாவில் தொடங்கிய சிவாவின் திரைப்பயணம் தொடர்ந்து பல உச்சங்களை தொட்டு வருகிறது.தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி, இன்றும் அவர்களின் வீட்டு பிள்ளையாகவே வலம் வருகிறார் சிவா.

பெரிய நட்சத்திர படங்களின் வெற்றிகூட அவர்களது ரசிகர்களின் வரவேற்பை தாண்டி குடும்ப ரசிகர்களின் கையில் உள்ளது என்பார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் குடும்ப ரசிகர்களையே, தனது ரசிகர்களாக கொண்டிருப்பதே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

நாயக பிம்பம் என்ற பிம்பத்தை சரியாக கட்டமைத்து. அதில் சரியாக பயணித்து வருகிறார் சிவா. அனைத்து வயது ரசிகர்களையும் ஈர்க்கும் விஷயங்களும் அமையும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு நாயகனின் வெற்றி தயாரிப்பாளர்கள் ஈட்டும் லாபத்தில் உள்ளது என்பார்கள்.

அந்தவகையில் தனது தயாரிப்பாளர்களுக்கு வசூல் ரீதியாக நிச்சய வெற்றியை தந்து வருகிறார் சிவகார்த்திகேயன். விமர்சன ரீதியாக தோல்வியடைந்த படங்கள்கூட வசூல் ரீதியாக வெற்றி தேடி தந்திருக்கிறது. இதுவே அவரை இன்று உச்சநட்சத்திரங்களின் வரிசையில் முன்னணியில் நிறுத்தி வைத்திருக்கிறது. விஜய், அஜித் என்று இயங்கும் தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் அவர்கள் இடத்தை நெருங்கி வருகிறார் சிவகார்த்திகேயன் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சந்தோஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.