மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மேகதாது விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைளையும் எடுப்பார் என தெரிவித்தார். முதலமைச்சர் எந்த நடவடிக்கையை எடுத்தாலும், அதற்கு சட்டத்துறை உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.







