டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கதை வென்றுள்ளது.
மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை அவர் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். சினாவின் ஹே சி ஹூய் முதல் இடம் பிடித்து தங்கபதக்கத்தை வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும் இருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் வென்றுள்ளது. கர்ணம் மல்லேஸ்வரி 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றார். அவரைத்தொடர்ந்து மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.







