ஓடிடியில் வெளியான ’சிறை’……!

நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

விக்ரம் பிரபு நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிடடைந்த படம் ’சிறை’. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிருந்த இப்படத்தில் அக்‌ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்திருந்த இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியானது. பெரிய ஆராவாரம் இல்லாமல் வெளியான படம் அழுத்தமான கதையால் ரசிகர்களை கவர்ந்தது.

ஏழு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவக்கப்பட்ட சிறை படமானது உலக அளவில் ரூ.31.58 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சிறை திரைப்படம், இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.