ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகமுவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக…

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகமுவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, ஒற்றைத் தலைமை குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.