ஒற்றை தலைமை தவறில்லை- முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்

ஒற்றைத் தலைமை தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்தார்.  சென்னையில் உள்ள அதிமுக தலைமையகமான எம் ஜி ஆர் மாளிகையில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட…

ஒற்றைத் தலைமை தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்
தெரிவித்தார். 

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகமான எம் ஜி ஆர் மாளிகையில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தினை நிறைவு செய்யும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் சி.பொன்னையன் , வைகை செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிந்ததை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான, பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்தார்.

மேலும், ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களை அழைப்பு விடுத்துள்ளது குறித்து எனக்கு தெரியாது. பொதுக்குழு கூட்டம் வரும் 23 ம் தேதி நடைபெறுமா 100 க்கு 1000 சதவீதம் நடக்கும் என கூறினார்.

ஒற்றைத் தலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கட்சியின் தலைமையாக இருக்கிறவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் எனவும், ஒற்றைத் தலைமை தவறில்லை. எந்த கட்சியிலும், எந்த முடிவுகளும் தவறில்லை. எல்லா கட்சியிலும் மாற்றம் இருப்பது இயல்பானது. பொதுக்குழுவில் தீர்மானங்களில் கட்டாயம் கையெழுத்து இடப்படும். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த முடிவுகள் பற்றி பேசப்படுமா என எனக்கு தெரியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவைப்பட்டால் அழைப்பு விடுக்கப்படும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் நாளை இறுதி வடிவம் பெறும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.