இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர் 75 வயதான கிருஷ்ணராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு திரைத்துறையினர் மற்றும் அரசையல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிங்கப்பூர் அதிபராக இருந்த தமிழர் எஸ்.ஆர் நாதன் அவர்களால் பாராட்டப்பட்ட பொற்காலம் திரைப்படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலின் மூலம் புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், மக்களின் மனதை நிறைத்த நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவா அவர்களின் குழுவில் ஒருவராக பணியாற்றி, அவரால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாள்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




