சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.  சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா…

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்,கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியத்தின் வீராங்கனையான லியானே டானை எதிர்த்து விளையாடி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், ஜப்பான் வீராங்கனை சேனா கவாகமியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் பி.வி.சிந்து சீன வீராங்கனையான ஜி யீ வாங்வை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஜி யீ வாங்கை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

இது பி.வி.சிந்துவின் முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டமாகும். சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சூப்பர் 500 புள்ளிகளை தனதாக்கி கொண்டார் பி.வி. சிந்து.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.