கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை: சிங்கப்பூர் அரசு

கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து,…

கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, நேற்று காலை இலங்கையில் இருந்து மாலத்தீவு தலைநகர் மாலிக்கு கோத்தபய ராஜபக்ச சென்றார். அவருடன் அவரது மனைவியும், 2 பாதுகாவலர்களும் சென்றனர்.

மாலியில் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த கோத்தபய, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார்.

சிங்கப்பூர் அரசு அவருக்கு தஞ்சம் அளித்துள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதனை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், (அரசு முறைப் பயணமாக அல்லாமல்)தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கலம் கோரவும் இல்லை என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, பொதுவாக வெறும் வேண்டுகோளின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசு அடைக்கலம் அளிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.