கேரளாவில் அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 11 பேரும் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் கேரளா வந்த ஒருவருக்கு நோய் அறிகுறி இருந்ததால் அந்த நபரை தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். தொடர்ந்து அவரது ரத்த மாதிரியை புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவரின் பரிசோதனை முடிவு சற்று நேரத்திற்கு முன்பாக கிடைத்தது. அதில் அவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த 35 வயது நபரை 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மனைவி, குழந்தை உட்பட 11
பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாரும் பயப்பட வேண்டாம். திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவருடன் விமானப் பயணத்தில் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை எடுக்க
முயற்சி நடைபெற்று வருகிறது என்றார் வீணா ஜார்ஜ்.