வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
வாரிசு திரைப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய், சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தான் அஜித் ரசிகராக இருந்தாலும், தன்னுடைய அண்ணன் விஜய் என சிலம்பரசன் தெரிவித்திருந்தார். சிம்புவின் வாலு படத்திற்கு பிரச்னை எழுந்தபோது, விஜய்தான் படம் வெளிவர உதவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







