ஜெயமோகன் திரும்ப சினிமாவுக்கு வரவேண்டும் அதற்கு இப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும்.
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2-ம் தேதி) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.இவ்விழாவிற்கு கமல்ஹாசனைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி இருந்தார். கமல்ஹாசனும் அவரின் அழைப்பை ஏற்று இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், “சிம்புவிற்கும் இப்படத்தில் நடித்த அவரது தம்பிக்கும் வணக்கம் (தாடியில்லாத சிம்பு). இந்த நெருப்பு அணையாது. வீண் போகாது. அது சிம்புவை குறிப்பதாகவே நினைக்கிறேன். குழந்தையாகப் பார்த்த சிம்புவே வெள்ளை தாடி வைத்துள்ளார். நான் வைத்தால் என்ன. பல திறமையாளர்கள் வந்துள்ளனர். வாழ்த்துகள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெயமோகன் திரும்ப சினிமாவுக்கு வரவேண்டும் அதற்கு இப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும். வந்தவுடன் அப்பா எப்படி இருக்கிறார் என்று தான் கேட்டேன். தமிழ்ப் படத்தைத் தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படம்தான். கெடுப்பதும் தமிழ்ப் படம்தான்.நட்சத்திர அந்தஸ்து இருக்கும் இல்லாமலும் போகும். திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பயிற்சியை நிறுத்திவிடக்கூடாது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளைச் செய்தால் மக்கள் கைவிட மாட்டார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமாக்களை கைவிட்டது கிடையாது. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்தவொரு தனி நடிகனும் கிடையாது. மக்கள் தான். எல்லா திறமைகளும் இங்கு உள்ளன. அதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” எனப் பேசினார்.