மீண்டும் திரைக்கு வரும் ’சிலம்பாட்டம்’

சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’சிலம்பாட்டம்’ திரைப்படம் ரீரிலாசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன் . இவர் நடிப்பில் வெளியான ’காதல் அழிவதில்லை’, ’தம்’, ’குத்து’,’மன்மதன்’, ’வல்லவன்’,’மாநாடு’ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. இதையடுத்துநடிகர் சிம்பு,  வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’அரசன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’சிலம்பாட்டம்’ திரைப்படம் ரீரிலாசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

S.சரவணன் இயக்கத்தில் உருவான “சிலம்பாட்டம்” படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரபு, சனுஷா, ஸ்நேகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ரீரிலீசாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  இதையடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.