முக்கியச் செய்திகள் சினிமா

ரஜினியின் ’அண்ணாத்த’யுடன் மோதுகிறது சிம்புவின் ‘மாநாடு’

சிம்பு நடித்த ’மாநாடு’ படம் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்துடன் தீபாவளிக்கு வெளியா கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படம் வெளியாக இருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

அதேபோல் அஜித்தின் ’வலிமை’ படமும் தீபாவளி அன்று ரிலீசாகும் என கூறப்பட்டன. ஆனால், அதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சிம்புவின் ’மாநாடு’ படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில், ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். அதில், நிறைவான மகிழ்வில் மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.#maanaadu என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து தீபாவளியன்று கொரோனா பயம் தாண்டி தியேட்டர்கள் களைகட்டும் என்று தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

Jeba Arul Robinson

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana

வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Jeba Arul Robinson