நிறைவேறிய அந்த கனவு: நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி

விமானத்தில் முதன் முறையாக தனது பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா, தனது கனவு நிறைவேறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ்…

விமானத்தில் முதன் முறையாக தனது பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா, தனது கனவு நிறைவேறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இவருக்கு தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருந்தது. அதை இப்போது அவர் நிறைவேற்றியுள்ளார். தன் பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ள நீரஜ் சோப்ரா, புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

‘என் பெற்றோர் இன்று முதன்முறையாக விமானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் என் கனவு நிறைவேறிவிட்டது. அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி’ என்று அதில் தெரிவித்துள்ளார். ஆனால், எங்கிருந்து எங்கு அழைத்துச் சென்றார் என்ற விவரத்தை நீரஜ் சோப்ரா தெரிவிக்கவில்லை.

ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த நீரஜ் சோப்ராவின் தந்தை சதிஷ்குமார் விவசாயி. அவருடைய தாயார் சரோஜ் தேவி. அவருக்கு 2 சகோதரிகளும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.