சிக்கிம் சுரங்கபாதை விபத்து : 7 பேர் பலி – மீத்தேன் வாயுவால் மீட்புப் பணியில் சிக்கல்…!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மீத்தேன் வாயு வெடிப்பினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை அடைத்து, தப்பிக்கும் வழியைத் துண்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய நீர்மின் சக்தி கழக (NHPC) பணியாளர்கள் உட்பட மொத்தம் 25 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும், மீதமுள்ள 18 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அபாயகரமான மீத்தேன் வாயு, குறைந்த ஆக்சிஜன் அளவு மற்றும் குறுகலான சுரங்கப்பாதை ஆகியவற்றால் மீட்புப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் சென்றடைவது கடினமாகிறது.

இது தொடர்பாக நாம்ச்சி மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் கூறியதாவது: சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் செறிவு மிகவும் அதிகமாக இருப்பதால், சிக்கிய தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை மீட்புக் குழுவினரால் சென்றடைய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளை வலுப்படுத்த, வாயுவிலிருந்து பாதுகாக்கும் உபகரணங்களுடன் கூடிய சிறப்புப் படை ஒன்று அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.