அகில இந்திய காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான திரு மல்லிகார்ஜுன் கார்கே ஜி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறட்டும்”என்று தெரிவித்துள்ளார்.




