பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29.07.2026 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ராமதாஸ் – அன்புமணி இடையே உட்கட்சி மோதல் வெடித்தது. இதனால் கட்சி இரு அணிகளாக செயல்பட்டன.
தேர்தல் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்த அன்புமணி தரப்பு பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே சமயம் சசிகலாவின் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவால் சொபிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளினால் இரு அணிகளும் இணைந்தன.




