தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-ம் சவரனுக்கு ரூ.1600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,815 க்கும். ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 13) ஆபரணத் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560-க்கு விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.4120 குறைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வந்தது. இன்று வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.5-ம் ஒரு கிலோவுக்கு ரூ.5000-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.195-க்கும். ஒரு கிலோ ரூ.1.95 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




