கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள்..!!!

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு…

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்கவுள்ளது. முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிலையில் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்க உள்ளனர். அவருடன் முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழா மைதானத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் , மநீம தலைவர் கமல்ஹாசன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.