இன்று மாலை வெளியாகிறது ‘சியான் 62’ பட அப்டேட்!

விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‘சியான்’ விக்ரம். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக…

விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‘சியான்’ விக்ரம். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தாண்டு ஏப்ரம் மாதம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. வீடியோ ஒன்றை வெளியிட்டு  ‘சியான்62’ படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை ‘சித்தா’ படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : “இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கடந்த அக்டோபர் மாதம் வெளியான படத்தின் அறிவிப்பு குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ‘சியான்62’ குறித்த புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.