முக்கியச் செய்திகள் சினிமா

உடல்நலம் குறித்து வதந்திகள்-முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி ஹாசன்

ஏழாம் அறிவு படத்தில் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனின் மகள் ஆவார்.

தமிழில் நடிகர் விஜய் உடன் புலி, நடிகர் அஜித் குமாருடன் வேதாளம், புத்தம் புது காலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கைவசம் அவருக்கு மூன்று படங்கள் உள்ளன. கடைசியாக தெலுங்கில் இவர் நடிப்பில் வக்கீல் சாப் படம் வெளியாகி வெற்றி அடைந்தது.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசனின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதலங்களில் வதந்திகள் உலா வந்தன.

இதுதொடர்பாக விளக்கம் அளித்து ஸ்ருதி ஹாசன் வீடியோ ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவரும் வணக்கம். நான் ஹைதராபாதில் இருக்கிறேன். இன்றைக்கு பல பெண்களுக்கு பிசிஓஎஸ் பாதிப்பு இருக்கிறது. எனக்கும் அந்தப் பாதிப்பு உள்ளது. இந்தப் பாதிப்பால் நான் அவதிப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதா என்றால் அப்படியில்லை என்று தான் கூற வேண்டும்.

எனது பதிவை சரியாக புரிந்துகொள்ளாமல் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இந்தச் செய்திகளை படித்துவிட்டு எனக்கு நிறைய பேர் செல்போனில் அழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.

சில ஆண்டுகளாக பிசிஓஎஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். அவ்வளவுதான். மற்றபடி நான் நலமாகத்தான் இருக்கிறேன். நீங்கள் அக்கறையுடன் எனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு நன்றி என்று அந்த வீடியோவில் ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதி ஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போது பிசிஓஎஸ் பிரச்னை குறித்து பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல்நலம் குறித்து செய்திகள் வெளியாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

EZHILARASAN D

பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

Halley Karthik

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Web Editor