“ஷோ ஓட்டிரலாமா டே” – போருக்கு ரெடியான ‘ரெட்ரோ’ சூர்யா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் – சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலிருந்து இதுவரை ‘கண்ணாடி பூவே’, ‘கனிமா’ , ‘தி ஒன்’, உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக் வடிவில் வெளியாகி வந்தன. இந்த படத்தின் டிரெய்லர் கட்-டை பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணத்தில் வரவிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ‘ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஆரம்பத்திலேயே ரசிகர்களை குஷிபடுத்தும்படி  ‘ஷோ ஓட்டிரலாமா டே’  என்ற வசனத்தை சூர்யா சொல்வதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே போல் கார்த்திக் சுப்பராஜின் பாணியில் உள்ள காட்சிகளும் அவரின் பழைய பட வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே சூர்யாவின் அதிரடியான சண்டை காட்சிகளும் அவ்வப்போது அழகான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து டிரெய்லரின் இறுதியில், ‘உண்மையான போர் வரணும்னுதான் காத்திருக்கோம் வர சொல்லு அந்த ஒருத்தன’ என்ற வசனத்தை டீசரில் ஒருவர் கூற அதற்கேற்ப சூர்யா மாஸான பின்னணி பாடலுடன் ஆயுதத்தை எடுத்து சண்டைக்கு கிளம்புவதுபோல் காட்சிகள் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.