பஞ்சாப் vs பெங்களூரு – மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

பெங்களூருவில் மழை பெய்து வருவதால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம்…

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை  6 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 4-ல் வெற்றியும், 2 போட்டிகளிலும் தோல்வியும் கண்டுள்ளது. புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் 6 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் எந்த அணி 5வது வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.