முக்கியச் செய்திகள் விளையாட்டு

துப்பாக்கி சுடுதல்-இந்தியாவுக்கு தங்கம்; பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் சிந்து!

தென் கொரியாவில் நடைபெற்று வரும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், ஆடவர் பிரிவில் ஹங்கேரி வீரரான ஜலன் பெக்லரை 16-12 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலில் 593 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறார் ஐஸ்வர்யா பிரதாப் சிங்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022

ஓரகனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 3000 மீட்டர் தடையோட்டம் தகுதி சுற்றில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே, பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:75 நொடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்ததை அடுத்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர்  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் PV சிந்து. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை சேனா கவாகமி- யை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி PV சிந்து அபாரம். இந்நிலையில் சூப்பர் 500 பள்ளிகளுக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் PV சிந்து.

மாற்றுத்திறனாளிகள் உலக கோப்பை – இந்தியாவுக்கு 2 தங்கம் 1 வெள்ளி

ஜெர்மனி நாட்டின் முனிச்சில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான உலக கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. p 3 25 மீட்டர் பிஸ்டல் sh 1 பிரிவில் ராகுல் ஜகர் தங்கமும், சிங்ராஜ் ஆதனா வெள்ளியும், குழுவினருக்கான பிரிவில் ராகுல், சிங்ராஜ், நிஹால் சிங் உள்ளிட்டோர் P3 25 மீட்டர் பிஸ்டல் sh 1 பிரிவில் தங்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

அவசியமான ஓய்வை நோக்கி விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி, வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வில் இருக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக விராட் கோலியின் பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை, விராட் கோலிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், விராட் கோலி தன் மீது இருக்கும் அழுத்தத்தை குறைக்க ஓய்வில் இருக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் வரை விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன், லண்டனில் ஓய்வு எடுக்க போவதாகவும், அதன் பின் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்

கேரளாவின் முரளி ஶ்ரீஷங்கர் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் முரளி ஶ்ரீஷங்கர்.

டி20 உலக கோப்பை 2022 – ஜிம்பாப்வே தகுதி

உலக கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றது ஜிம்பாவே கிரிக்கெட் அணி. நடப்பாண்டு டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தகுதிப் போட்டிகளுக்கான அரையிறுதி ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியுடன் மோதிய ஜிம்பாப்வே வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றது. இந்த சந்தோசத்தை ஜிம்பாப்வே அணி வீரர்கள் தங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டிகளை கைப்பற்றி 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

Jeba Arul Robinson

3வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே

EZHILARASAN D