முக்கியச் செய்திகள் இந்தியா

மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவானது.

மொய்ராங்கின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு 11.42 மணிக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நிலநடுக்கம் ரிக்டர் அளவு 4.8, 16-07-2022 அன்று ஏற்பட்டது, நீளம்: 94.37, ஆழம்: 94 கிமீ, இடம்: 66 கிமீ ESE மொய்ராங், மணிப்பூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக ஜூலை 5ஆம் தேதி அசாமில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான மத்திய அரசின் அமைப்பாகும்.

இதனிடையே, குஜராத்தில் இடைவிடாத பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலானா இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.

குஜராத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. சில மாவட்டங்களில் சாலைகள் சேதமடைந்தன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோல், மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏற்றுமதியில் முதலிடம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

EZHILARASAN D

முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

Jeba Arul Robinson

“பல்கலைக்கழகத்தின் ஆணவப்போக்கு மாணவர்களுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்”

Web Editor