அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு மாகாணமான மிசிசிப்பி பகுதியில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் பள்ளியில் குவிந்திருந்தனர்.

அப்போது கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்த தகவல் தெரியவில்லை.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.