ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணி… 6 ஆண்டுகளுக்குப் பின் டெலிவிரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி!

6 வருடங்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார். …

6 வருடங்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார்.  1 வாரத்திற்கு பிறகு இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார்.  இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை ஃபிளிப்கார்ட் நிறுவன ஊழியர் வீட்டிற்கு வந்து கொடுத்துள்ளார்.  இதனை அஹ்சன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

ஆறு வருடத்திற்கு பின் இந்த ஆர்டருக்காக ஃபிளிப்கார்ட் என்னை அழைத்து,  என்ன பிரச்னைகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள் என கேட்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பல கருத்துகள் குவிந்து வருகின்றன.  இந்த பதிவிற்கு தங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு,  உங்களது பொறுமைக்கு பாராட்டுகள் என ஃபிளிப்கார்ட் நிறுவனமும் பதிலளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.