33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பல்லடம் அருகே அதிர்ச்சி சம்பவம்… 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை..

பல்லடம் அருகே இரு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பாஜக பிரமுகரின் குடும்பத்தினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தப்பிய குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இரு பெண்கள் உட்பட நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு அவர்களது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி இந்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் ப்ரீசர் பாக்ஸ் இல்லாத காரணத்தால் போராட்டம் நடைபெற்றது என காவல்துறையினர் தெரிவித்தனர்.செந்தில்குமாரிடம் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த 2 பேரும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசாரின் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து கொலை செய்துவிட்டு மூன்று பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற இரண்டு பைக்குகள் மற்றும் சிசிடிவி., காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

எம்.பி பதவியையும் ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

Web Editor

கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஒன்றாக விளையாட வாய்ப்பு? ரோஹித் சர்மா விளக்கம்!

Web Editor

அம்பத்தி ராயுடு எங்களுடன்தான் இருப்பார்; சிஎஸ்கே

EZHILARASAN D