குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த தொடர்…

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள
பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து ஆனந்த குளியல் போட காத்திருந்த நிலையில், வெள்ளப்பெருக்கினால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் திரும்பினர். மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.